Wednesday, August 12, 2020

பணத்தில் நீ

எப்போதும் போல் ஊருக்கு திரும்ப தயாராகிக்கொண்டிருந்தேன், வெள்ளிக்கிழமை இரவு என்பதால் பேருந்தில் நிற்க்க கூட இடம் இருக்காதென்பது தெரியும்.

ஆனால் அன்று அதிசயமோ இல்ல எங்க ஊருக்கு போக நிறைய பேர் இல்லயோ என்ற ஆச்சர்யத்தோடு பேருந்தில் ஏரியாச்சு, பிடிக்காத கடைசி வரிசையில் நடு சீட்டு :( தூங்க வசதி இல்லாததினால் ஹெட்போனில் பாட்டுடன் சிறிது நேரம் கழிய, பாட்டு முடிந்து அடுத்த பாட்டு வரும் இடை அமைதியில் சில பெண்களின் சிரிப்பு சத்தம் அடுத்த பாட்டை மாற்ற விடாமல் அந்த பெண்களின் பேச்சுகளை(சிரிப்பை) கேட்க்க தொடங்கினேன்.

பேருந்தின் உள் நிற்க யாரும் இல்லாததால் அவளும் அவள் தோழியும் திரும்பி உட்கார்ந்து பேச தொடங்கினர்(பேருந்தின் வலது சீட்டில் அவளும் இடது சீட்டில் அவள் தோழியும்).  அவள் முகம் அழகாய் தெரிய வேண்டும் என்பதற்காகவே, அவளுக்கு மேல் ஒரு வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற ட்யூப்லைட், அவள் தேவதையானால் நான் சொர்கம் சென்றேன்.

இப்படியே அவள் தோழியுடன் பேசுவதையும் சிரிப்பதையும் பல க்யூட் முகபாவங்களையும் பார்த்துக் கொண்டுவந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இன்னும் 1/2மணி நேரத்தில் ஊர். அவள் எங்கு வழியில் உள்ள ஊர்களிலேயே இறந்கிவிடுவாளோ என்ற யோசனையோடும் ரசிப்பதையும் நிருத்தாமல் ஊர் வந்துவிட்டது. சரி இறங்குவதற்க்கும் முன் அவளின் முகத்தை இன்னும் அருகில் பார்த்துவிட வேண்டும் என்று அவளை தாண்டி சென்று முன் படி வழியில் இறங்கலாம் என ப்ளானுடன், பஸ் ஸ்டாப் வந்துவிட்டது நான் எழுந்து அவளை நோக்கி சென்று அருகில் நன்று பார்த்ததும், அவளும் என்னை பார்த்தாள். இது போதும் என்று இறங்கி வந்துவிட்டேன் .

Saturday, June 1, 2013

என்ன மாதிரி குழந்தைமா எதிர்பாக்குறீங்க ?


டாக்டர் : 
என்ன மாதிரி குழந்தைமா எதிர்பாக்குறீங்க ?

அம்மா(8 மாசத்துக்கு பிறகு) :
 ஹம்.... ரொம்ப கலரா வேணாம் கருப்பாவும் வேணாம்.

புத்திசாலியா இருக்கனும்.

மூக்கு வாய் மட்டும் என்ன மாதிரி இருக்கனும், கண்ணு மட்டும் அவங்க அப்பா மாதிரி வேணும் இல்லனா கோச்சிப்பாரு.

இங்லீஷ் டிஃபால்ட் தானே ? அப்ப தமிழ், ஹிந்தி போதும் .. இல்ல இல்ல ஃப்ரென்ச்ம் வேணும் எனக்கு தான் தெரியாது என் குழந்தையாவது தெரிஞ்சிக்கிட்டோமே!

வளர்ந்ததும் 6.2 ஹைட் 90க்கு மேல வெயிட் ஏறவேக்கூடாது.

ஆத்லட்டிக் மாதிரியான உடல் வாகு இருக்கும்.

20 வருஷத்துக்கு பிறகும் ராக்கேட் சைன்டீஸ்க்கு தான் ஸ்கோப் இருக்கு'னு சொல்றாங்க அதனால ராக்கேட் சைன்டீஸ்டாக ஆவனும்.

அவ்வளவு தான் டாக்டர், நான் எப்ப வரட்டும் ?



டாக்டர் :
நல்ல விஷயங்கள தான் ச்சூஸ் பண்ணிருக்கீங்க, போன வாரம் எனக்கு தெரிஞ்ச நண்பருக்கும் கிட்ட தட்ட இதே ஃப்யூச்சர்ஸுடன் DNA ரெடி பண்ணினோம்.

ஒரு 10 நிமிஷம் வெயிட் பண்ணுங்க மொதல்ல ஹாலோக்ராம்ல மாடல் பாத்துட்டு கன்ஃபார்ம் பண்ணிட்டா நாளைக்கே DNAவ ரெடி பண்ணிடலாம்.