Saturday, June 1, 2013

என்ன மாதிரி குழந்தைமா எதிர்பாக்குறீங்க ?


டாக்டர் : 
என்ன மாதிரி குழந்தைமா எதிர்பாக்குறீங்க ?

அம்மா(8 மாசத்துக்கு பிறகு) :
 ஹம்.... ரொம்ப கலரா வேணாம் கருப்பாவும் வேணாம்.

புத்திசாலியா இருக்கனும்.

மூக்கு வாய் மட்டும் என்ன மாதிரி இருக்கனும், கண்ணு மட்டும் அவங்க அப்பா மாதிரி வேணும் இல்லனா கோச்சிப்பாரு.

இங்லீஷ் டிஃபால்ட் தானே ? அப்ப தமிழ், ஹிந்தி போதும் .. இல்ல இல்ல ஃப்ரென்ச்ம் வேணும் எனக்கு தான் தெரியாது என் குழந்தையாவது தெரிஞ்சிக்கிட்டோமே!

வளர்ந்ததும் 6.2 ஹைட் 90க்கு மேல வெயிட் ஏறவேக்கூடாது.

ஆத்லட்டிக் மாதிரியான உடல் வாகு இருக்கும்.

20 வருஷத்துக்கு பிறகும் ராக்கேட் சைன்டீஸ்க்கு தான் ஸ்கோப் இருக்கு'னு சொல்றாங்க அதனால ராக்கேட் சைன்டீஸ்டாக ஆவனும்.

அவ்வளவு தான் டாக்டர், நான் எப்ப வரட்டும் ?



டாக்டர் :
நல்ல விஷயங்கள தான் ச்சூஸ் பண்ணிருக்கீங்க, போன வாரம் எனக்கு தெரிஞ்ச நண்பருக்கும் கிட்ட தட்ட இதே ஃப்யூச்சர்ஸுடன் DNA ரெடி பண்ணினோம்.

ஒரு 10 நிமிஷம் வெயிட் பண்ணுங்க மொதல்ல ஹாலோக்ராம்ல மாடல் பாத்துட்டு கன்ஃபார்ம் பண்ணிட்டா நாளைக்கே DNAவ ரெடி பண்ணிடலாம்.

No comments:

Post a Comment