Monday, January 9, 2012

நீண்ட தூரப் பயணம்




அது ஒரு நீண்ட தூர பயணத்துக்கான நாள், என் புதிய அலுவலகத்தின் ட்ரிப் டே சென்னையிலிருந்து கோவா வரையிலான சொகுசு பேருந்து பயணம், என் முதல் நீண்ட பயணமும் அது!!!

பல தெரியாத முகங்கள், புதிய நண்பர்கள், பல ஜோடிகள் என பயணம் தொடங்கியது. திடிர்னு ஒரு குரல் "நிறுத்துங்க"... ஆமாம் அது ஒரு பெண்தான், அவள் புதிதாக வேலைக்கு சேர்ந்தவள். என் பக்கத்து சீட்டு காலியாய் இருந்தும் அவள் எனக்கு முன் இருந்த காலி சீட்டில் அமர்ந்தாள் (ஏன் என்றால் அதில் ஒரு பெண் மட்டும் தான் இருந்தாங்க). கோவா எப்பொழுது வரும் போலானது... தனிமை பயணத்தின் நேரத்தை அதிகரித்தது.

என் இவ்வளவு சீக்கிரம் கோவா வந்துடுச்சானு என் நண்பன் கேட்டான் !! காரணம் பக்கத்தில் அவன் காதலி அமர்திருந்தாள் ...
சரி கோவா வந்துட்டோம் அடுத்ததென்ன என்ஜாய் தான் !



அதுவும் முடிந்து களைத்து போய் ரூம்க்கு சென்றுக்கொண்டிருக்கையில் மீண்டும் அவளை பார்த்தேன், ஆனால் அவள் என்னை பார்த்தும் ஒரு புன்னகைக்க கூட இல்லை , காரணம் என்னை அவளுக்கு  தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இருந்தும் அவள் கிட்ட போய் பேசத் தொடங்கினேன், முதலில் வேலையை பற்றி தொடங்கி காலேஜ், நண்பர்கள், ஊர், என பேச்சு வளர்ந்து கிட்ட தட்ட தூரத்து சொந்தம் அளவிற்க்கு வந்துவிட்டது நண்பர்களாகிவிட்டோம்.

அடுத்த பயணம் தொடங்கியது(அதான் கோவா டூ சென்னை) ஆனால் இந்த முறை அவள் என் பக்கத்தில் அமர்ந்தபடி மீண்டும் பேசிக்கொண்டிருந்தோம் (இந்த பயணம் இன்னும் நீள வேண்டும் என்ற ஆசையுடன்), அவள் அழகையும் மீறி அவள் அழகாகத் தெரிந்தாள் ! எனக்கு காதல் வந்துவிட்டது ! சென்னையும் வந்துவிட்டது !!

No comments:

Post a Comment